உலகமயமாதலின் பொருளாதாரம் – பஞ்சம், விலைவாசி





பொதுவாக, எந்த ஒரு மக்களின் மீதும் வறுமையை ஏற்படுத்தும் பொருளாதாரத்தைத் திணித்து, அம்மக்களிடமிருந்து பெறப்படும் உழைப்பால் விளையும் உற்பத்தியை கொள்ளையடித்துதான் மூலதனம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூட்சமத்தை உள்ளடக்கியதுதான் உலகப் பொருளாதாரக் கொள்கை. இக்கொள்கையால் உலகின் பெரும்பான்மையான மக்களுக்கு நுகர்வு மறுக்கப்படுகிறது. ஏனெனில் நுகர்வு மறுப்பே வறுமையின் தோற்றுவாய். வறுமைதான் செல்வத்தின் செழிப்பான வளத்தை வழங்கும் காரணி. வறுமையும் இல்லாமையும் உலகெங்கும் பெருக, செல்வம் அதன் அதீதமான வளத்தைப் பெறுகிறது. இது எதிர்மறை அம்சமாகவே வளர்ச்சியுறுகின்றது.

இந்தியாவில் அடிமைகளைப் பிடிப்பதற்கு ஆப்பிரிக்க நாடுகளைப் போல் வேட்டையாடவில்லை. மாறாக கிராமங்களில் பஞ்சத்தை உருவாக்கினர். கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் அனைத்திலும் தொடக்கம் முதலே பஞ்சங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக தமிழகத்தில் 1646 தொடங்கி 1907 வரை அதாவது மெட்ராஸ் மாகாண‌த்தை உருவாக்கியபின் இதன் வரலாறு நெடுக பஞ்சங்களைக் காண‌முடியும். கிட்டத்தட்ட 17க்கும் மேற்பட்ட உணவுப் பஞ்சம் மெட்ராஸ் மாகாண‌த்தைத் தாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பலிவாங்கியது. தப்பிப் பிழைத்தவர்கள் பஞ்சம் பிழைக்க நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்தபோது, வேலை தருவதாய்ச் சொல்லி கொத்தடிமைகளாக்கப்பட்டது, பக்கிங்ஹாம் கால்வாய் வெட்டப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. இத்தகைய உழைப்பையே சாலைகள், கோட்டை, கொத்தளங்கள் என்று நகரின் துரித வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டன. இப்படி இவர்கள் பஞ்சங்களை ஏற்படுத்துவதின் நோக்கம் மனித உழைப்பு மதிப்பீடுகளின் வீழ்ச்சியை முன்னிருத்தித்தான் என்பது புலப்படுகிறது. தொடர்ந்து படிக்க....

No comments:

Recent Posts

Visitor’s count

 
  • Blogroll

  • Consectetuer

  • Popular

  • Comments