பெண்ணியத்தின் தோற்றமும் முடிவும்.


2011ஆம் ஆண்டில் உலக பெண்கள் தினத்தில் நமக்கென சொல்லத்தக்க வரலாற்றை படைத்துச் சென்ற பெருமைமிகு வரலாற்றிற்க் குறியவர்களான நமது தாய்மார்கள், சகோதரிகள் கனவை நனவாக்குவோம்! அவர்களுக்கு நமது தேசத்தின் உயர்நத கௌரவம் உரித்தாகட்டும்.

பெண்கள் தமது சமூக நிலையை உணர்ந்து அதற்கெதிராகக் குரல்கொடுக்கத் தொடங்கியது 1600களில் ஆரம்பத்தில்தான் என்று ஏடறிந்த வரலாறு குறிப்பிடுகிறது. ஆரம்பத்தில் தனிநபர் ரீதியாகத்தான் பெண்களது விழிப்புணர்வுக் குரல்கள் வெளிப்படலாயின. 17ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்து நாட்டு முதலாளித்துவப் புரட்சி, நாட்டை இரண்டு மகாம்களாகப் பிளவுபடுத்தியது. நிலவுடமை அதிகாரத்தை கொண்டிருந்த திருச்சபைகளையும் நிலவுடமையாளர்களையும் ஒன்றுபடுத்தி மாட்சிமைதாங்கிய ஆட்சி அதிகாரத்தைச் சுற்றி நின்றது ஒரு முகாம்.     தொடர்ந்து படிக்க...

இந்தியாவின் அகதி அரசியல்

Refugees arrive atn Rameshwaram 001
        ஆசிய கண்டத்திலேயே அதிக அளவில் அகதிகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. வல்லாதிக்க நாடுகளின் தாராளமய பொருளாதாரக் கொள்கையின் விளைவாகவும், உலகமயமாக்களின் விளைவாகவும் மிகப்பெரிய கட்டுமானங்கள், பெருநகரங்களின் உருவாக்கங்கள், சாதிவெறி, மதவெறி கலவரங்கள், தேசிய ஆக்கிரமிப்பு போர்கள், இனப்படுகொலைகள், மற்றும் செயற்கை வறட்சி, வறுமை அதோடு இயற்கை சீற்றம் என்று பற்பல காரணங்களுக்காக இந்தியாவிற்குள்ளேயும் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

       இவர்களுடன் அண்டை நாடுகளான நேபாளம், பூட்டான், திபெத், பர்மா உட்பட தமிழீழ அகதிகளும் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்திய அரசும், அதைச் சார்ந்த மாநில அரசுகளும் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் அகதிகளுக்கென்று சிறப்பான வாழ்விடங்களை உருவாக்கி அவர்களைக் குடியமர்தி வருகிறது. தொடர்ந்து படிக்க....

உலகமயமாதலின் பொருளாதாரம் – பஞ்சம், விலைவாசி





பொதுவாக, எந்த ஒரு மக்களின் மீதும் வறுமையை ஏற்படுத்தும் பொருளாதாரத்தைத் திணித்து, அம்மக்களிடமிருந்து பெறப்படும் உழைப்பால் விளையும் உற்பத்தியை கொள்ளையடித்துதான் மூலதனம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூட்சமத்தை உள்ளடக்கியதுதான் உலகப் பொருளாதாரக் கொள்கை. இக்கொள்கையால் உலகின் பெரும்பான்மையான மக்களுக்கு நுகர்வு மறுக்கப்படுகிறது. ஏனெனில் நுகர்வு மறுப்பே வறுமையின் தோற்றுவாய். வறுமைதான் செல்வத்தின் செழிப்பான வளத்தை வழங்கும் காரணி. வறுமையும் இல்லாமையும் உலகெங்கும் பெருக, செல்வம் அதன் அதீதமான வளத்தைப் பெறுகிறது. இது எதிர்மறை அம்சமாகவே வளர்ச்சியுறுகின்றது.

இந்தியாவில் அடிமைகளைப் பிடிப்பதற்கு ஆப்பிரிக்க நாடுகளைப் போல் வேட்டையாடவில்லை. மாறாக கிராமங்களில் பஞ்சத்தை உருவாக்கினர். கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் அனைத்திலும் தொடக்கம் முதலே பஞ்சங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக தமிழகத்தில் 1646 தொடங்கி 1907 வரை அதாவது மெட்ராஸ் மாகாண‌த்தை உருவாக்கியபின் இதன் வரலாறு நெடுக பஞ்சங்களைக் காண‌முடியும். கிட்டத்தட்ட 17க்கும் மேற்பட்ட உணவுப் பஞ்சம் மெட்ராஸ் மாகாண‌த்தைத் தாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பலிவாங்கியது. தப்பிப் பிழைத்தவர்கள் பஞ்சம் பிழைக்க நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்தபோது, வேலை தருவதாய்ச் சொல்லி கொத்தடிமைகளாக்கப்பட்டது, பக்கிங்ஹாம் கால்வாய் வெட்டப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. இத்தகைய உழைப்பையே சாலைகள், கோட்டை, கொத்தளங்கள் என்று நகரின் துரித வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டன. இப்படி இவர்கள் பஞ்சங்களை ஏற்படுத்துவதின் நோக்கம் மனித உழைப்பு மதிப்பீடுகளின் வீழ்ச்சியை முன்னிருத்தித்தான் என்பது புலப்படுகிறது. தொடர்ந்து படிக்க....

பறவைகள் [சிறுகதை]

இந்தியத் தீபகற்பத்தின் ஏழு வடமாநிலங்களிலிருந்து தென் முனையில் உள்ள வயநாடு வரை பழங்குடிமக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும் குழுமங்களின் ஆக்கிரமிப்பாலும், நிலவுடைமையாளர்களின் ஆதிக்கத்தாலும், பேராசை கொண்ட ஒப்பந்தக்காரர்கள், வட்டிக்கு விடுவோர், வணிகர்களின், காட்டு இலாக்கா அதிகாரிகளின், அரசாங்க அதிகார வர்கங்களின், காவல் துறையினரின் கொடுங்சுரண்டலுக்கும், ஒடுக்கு முறைக்கும், அடக்கு முறைக்கும் பாகுபாட்டிற்கும் காலங்காலமாய் ஆட்பட்டு இன்னலுற்று வருகின்றனர். காடுகளின் விளைபொருட்களை சேகரிக்கும் மரபுவழிப்பட்ட உரிமைகள் பழங்குடிகளுக்கு மறுக்கப்பட்டு வரும் அதேவேலையில் மலைகளை அழித்து மூன்று லட்சம் கோடி மதிப்புள்ள பிரம்மாண்டமான எஃகுத் தொழிற்சாலைகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றனர். இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம். தொடர்ந்து படிக்க>>

நேர்காணல்


இரா.பாலன் குறும்படத் துறையில் ஆர்வம் கொண்ட இவர், கவிதை, ஓவியம் போன்ற நுண்கலைகளிலும் இயங்கி வருகிறார்.
'தோழர் அம்பேத்கர்' எனும் ஆவணப்படத்தையும், செய்யாறு அருகில் 'தொழுப்பேடு' கிராமத்தில் ஆதிக்க சாதியினரின் தாக்குதலுக்கு அஞ்சி 140 தலித் குடும்பங்கள் பூர்விகமான இடத்தைக் காலி செய்து விட்டு புலம்பெயர்ந்து ஏரிப் பகுதியில் குடியேறிய நிகழ்வை வைத்து 'தொழுப்பேடு' எனும் ஆவணப் படத்தையும், அமெரிக்காவும் பிரிட்டனும் அத்து மீறி நடத்திய ஈராக் யுத்தத்தைப் பற்றி 'கழுகுகள்' எனும் ஆவணப்படத்தையும் நண்பர்களுடன் இணைந்து இயக்கி இருக்கிறார். தொடர்ந்து படிக்க>>

இலக்கிய போட்டி பரிசளிப்பு விழாவின் புகைப்படங்கள்


தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்திய இலக்கிய போட்டி பரிசளிப்பு விழாவின் புகைப்படங்கள். விரிவு...



Recent Posts

Visitor’s count

 
  • Blogroll

  • Consectetuer

  • Popular

  • Comments